செலவு ரூ.5 கோடி: வரவு ரூ.25 கோடி! சாய் பல்லவி


செலவு ரூ.5 கோடி: வரவு ரூ.25 கோடி! சாய் பல்லவி
x
தினத்தந்தி 31 July 2017 1:23 PM IST (Updated: 31 July 2017 1:22 PM IST)
t-max-icont-min-icon

‘பிரேமம்’ (மலையாள) படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழி ரசிகர்களுக்கும் அறிமுகமானவர், சாய் பல்லவி.

இவர் நடித்த ‘பிடா’ என்ற தெலுங்கு படம், ஆந்திராவில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரூ.5 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம், இதுவரை ரூ.25 கோடி வசூல் செய்து இருக்கிறது.

படத்தில், வருன் தேஜ் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி சாய் பல்லவியின் கதாபாத்திரம், ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால், படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சாய் பல்லவியின் ‘மார்க்கெட்’ அந்தஸ்து மேலும் ஒரு படி உயர்ந்து இருக்கிறது.

Next Story