சிறப்பு பேட்டி

கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி + "||" + keerthi suresh in happy

கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி

கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
கீர்த்தி சுரேஷ் இரண்டு வருடங்களுக்கு முன்பு இது என்ன மாயம் படத்தில் அறிமுகமாகி விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என்று முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாகி மளமளவென வளர்ந்து இருக்கிறார்.
சூர்யா வுடன் நடிக்கும் தானாசேர்ந்த கூட்டம் பட வேலைகள் முடிந்து திரைக்கு வர தயாராகிறது. தெலுங்கில் நானி, ராம் என்று இளம் நடிகர்களுடன் நடித்துள்ளார். பவன் கல்யானுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

அடுத்து விக்ரமுடன் சாமி-2, விஷாலுடன் சண்டக்கோழி-2 ஆகிய படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளார். அவர் நடித்த படங்கள் வசூல் குவிப்பதால் சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தி விட்டார் என்று தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். சாமி-2 படத்தில் திரிஷா இருந்தாலும் கீர்த்தி சுரேசுக்குதான் கதையை நகர்த்தி செல்லும் முக்கிய வேடமாம். திரிஷாவை விட அதிக காட்சிகளில் நடிக்கிறாராம். இதனால் கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சியில் இருக்கிறார்.