சினிமா செய்திகள்

96 கிலோவில் இருந்து கவர்ச்சியான உடலுக்கு.. நடிகை சாரா அலிகானின் அழகான நினைவுகள் + "||" + Beautiful memories of actress Sarah Ali Khan

96 கிலோவில் இருந்து கவர்ச்சியான உடலுக்கு.. நடிகை சாரா அலிகானின் அழகான நினைவுகள்

96 கிலோவில் இருந்து கவர்ச்சியான உடலுக்கு.. நடிகை சாரா அலிகானின் அழகான நினைவுகள்
சாரா அலிகான், இளமை ததும்பும் இந்தி நடிகை. திரை உலகில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் அவர், தனது ஆசைகள்.. கனவுகள்.. குறித்து மனம் திறந்து சொல்கிறார்.
பாட்டு, நடனம் என்று பொழுதைப்போக்கிக் கொண்டிருந்த நீங்கள் எப்படி நடிக்க வந்தீர்கள்?

நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் எதுவும் எனக்கு இருந்ததில்லை. சினிமா பாடல்களுக்கு நடனமாடுவதும், பாடுவதும் மட்டுமே எனக்கு பிடித்தமானதாக இருந்தது. சிறுவயதில் விளம்பரத்தைப் பார்த்தால் அதேபோல் நடித்துக் காண்பிப்பேன். அந்தப் பழக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது. அது குழந்தைத் தனம் என்றே எல்லோரும் நினைத்தார்கள். நானும் அப்படியே நினைத்தேன். ஆனால் நடிக்க வேண்டும் என்பதும், இந்த துறையிலே பயணிக்கவேண்டும் என்பதும் பின்பு ஏற்பட்ட ஆசைதான்!

உங்கள் சினிமா வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்?

நேர்மையாகவும், சுத்தமாகவும், மக்களின் மனதில் பதியும் விதமாகவும் அமைத்துக்கொள்ள விரும்பு கிறேன்.

உங்களுக்கு பணம் மட்டும் போதுமா? இல்லை ஸ்டார் அந்தஸ்தும் வேண்டுமா?

ஸ்டார் அந்தஸ்தில் எல்லா காலமும் நிலைத்திருக்க முடியாது என்பது எனக்குதெரியும். இது வேடிக்கையான உலகம். இது என்போல் பலரை பார்த்துள்ளது. இன்னும் பலரையும் பார்க்க உள்ளது.

ஆண்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்?

ரசிகர்களிடம் இருந்து நான் புகழ்ச்சியையும் எதிர்பார்க்கவில்லை. தொல்லையையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு பிடிக்காத விதத்தில் என்னிடம் யார் நடந்துகொண்டாலும் கோபப்படுவேன். நான் அன்பானவள். அதே நேரத்தில் அதிரடியானவளும்தான்!

நீங்கள் குர்தா அணிந்து கொண்டு கோவில் முன்பு நின்று பிரசாதம் கொடுத்தீர்களாமே?

நான் சனிக்கிழமை தோறும் கோவிலின் வெளியே நின்று வெள்ளை சல்வார் அணிந்து பிரசாதம் வினியோகிப்பது வழக்கம்தான். இன்றைய ஆண்கள், பெண்கள் சல்வார் குர்தாவை அணிவதை விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். நான் ஜிம் சென்று திரும்பியதும் ஆண்களை சந்தித்தால் குட்டையான, இறுக்கமான உடை அணிந்திருப்பேன். குர்தாவும், குட்டைப்பாவாடையும் எனக்கு முக்கியம்தான். அவைகளை எனது சவுகரியத்திற்கு தக்கபடி அணிந்துகொள்கிறேன். எனது உடைகளை ஆண்கள் எந்த மனநிலையில் பார்க்கிறார்கள் என்று நான் நினைத்துப்பார்ப்பதில்லை. அவர்கள் எப்படி பார்த்தாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை.

உங்கள் அழகை, கவர்ச்சியை யாராவது புகழ்ந்தால்?

நான் கவர்ச்சியாக இருப்பதாக நம்பவில்லை. எனது கவனத்தை ஈர்ப்பதற்காக என்னை புகழ்வதாக எடுத்துக்கொள்வேன்.

அழகு ரகசியத்தை சொல்லுங்களேன்?

ரசாயன அழகுப் பொருட்களை நான் தொடுவதே இல்லை.

அதனால்தான் உங்கள் தலையில் வெங்காய வாசனை வீசுவதாக பேச்சு எழுந்ததா?

ஆம். என்னுடன் நடித்தவர்கள் அதுபற்றி கேட்டிருக் கிறார்கள். எனக்கு வெங்காயத்தை அறிமுகம் செய்தவர் ரன்வீர்தான்.

படிக்கும்போது குண்டாக இருந்தீர்களாமே?

ஆம். கல்லூரியில் படிக்கும்போது 96 கிலோ இருந்தேன். அப்போதும் என் தோற்றத்தைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. அப்போது ஒரே நேரத்தில் 5 பீட்சாக்களை சாப்பிட்டுவிடுவேன். இப்போது 55 கிலோவுக்கு வந்துவிட்டேன். விரைவில் 54 கிலோவாக குறைவேன். இப்போது அந்த குண்டுப்பெண் நானில்லை. என்னாலும் எடையை குறைக்க முடியும். எப்போது எதை கெட்டது என்று நினைக்கிறோமோ, அப்போதே நாம் நல்லதுக்கு மாறத் தொடங்கி விடுவோம். அப்படித்தான் எனது உடல் எடையை குறைத்தேன்.

சினிமா துறையில் நீங்கள் கண்ட குறைபாடுகள் என்ன?

எல்லா துறையிலும் குறைபாடுகள் இருக்கும். உலகெங்கிலும் குறைகள் உண்டு. குறைகளை நாம் ஏற்றுக் கொண்டுதான் வாழ வேண்டும். நான் சினிமா வாழ்க்கையையும்-நிஜவாழ்க்கையையும் பேலன்ஸ் செய்துகொண்டு வாழ, எனக்கு என் அம்மா கற்றுத்தந்திருக்கிறார்.