“என் படங்களில், இசை ஒரு முக்கிய கதாபாத்திரம்” மிஷ்கின் சொல்கிறார்


“என் படங்களில், இசை ஒரு முக்கிய கதாபாத்திரம்” மிஷ்கின் சொல்கிறார்
x
தினத்தந்தி 4 Dec 2020 4:00 AM IST (Updated: 4 Dec 2020 1:25 AM IST)
t-max-icont-min-icon

இசை, ஒரு முக்கிய கதாபாத்திரம் போல் இருக்கும். அவருடைய படத்தின் ரகசியங்களில், இசையும் ஒன்று.

மிஷ்கின் படங்களில், இசை தனித்து தெரியும். இசையின் வலிமை வெகு அழகாக படத்துடன் பொருந்தி இருக்கும். அவரது படத்தின் இசை, ரசிகர்களை பிரமிக்கச் செய்வதாகவே இருக்கும். இசை, ஒரு முக்கிய கதாபாத்திரம் போல் இருக்கும். அவருடைய படத்தின் ரகசியங்களில், இசையும் ஒன்று.

அவர் இப்போது இயக்கி வரும் ‘பிசாசு-2’ படத்துக்கு நேர்த்தியான இசையை எதிர்பார்த்து, கார்த்திக்ராஜாவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். படத்தின் இசைக்கோர்ப்பு வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்து விட்ட நிலையில், அது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் என்று கூறி, மிஷ்கின் பாராட்டியிருக்கிறார்.

“கார்த்திக் ராஜாவின் இசை பல படங்களுக்கு உயிர் தந்து இருக்கிறது. எனக்கு இன்னும் சிறப்பான தருணங்களை இந்த இசைப்பயணம் தரும் என்று நம்புகிறேன்” என்கிறார், மிஷ்கின். ‘பிசாசு-2’ படத்தில் ஆண்ட்ரியா கதைநாயகியாக நடித்து வருகிறார். டி.முருகானந்தம் தயாரிக்கிறார்” என்றும் அவர் கூறினார்.
1 More update

Next Story