சித்ரா லட்சுமணனை வியக்க வைத்த நகைச்சுவை நடிகர்
தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர் என மூன்று முகங்களை கொண்டவர், சித்ராலட்சுமணன்.
‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில் இவர் சந்தானத்துடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகளுக்கு அதிக வரவேற்பு இருந்ததால், இவர்கள் கூட்டணி மேலும் சில படங்களில் தொடர்கிறது. இதுபற்றி சித்ரா லட்சுமணன் சொல்கிறார்:
“ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் சந்தானத்துடன் நான் சேர்ந்து நடிக்கும் படம், ‘டிக்கிலோனா.’ இந்தப் படத்தின் டைரக்டர் கார்த்திக் யோகி முழுக் கதையையும் என்னிடம் சொன்னார்.
‘டைம் டிராவல்’ என்று சொல்லப்படுகிற கால பயணத்தை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்த அந்த கதையில், 3 வித்தியாசமான வேடங்களில் சந்தானம் நடிக்கிறார். இந்தப் படத்தில் நான் இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். ஒரு பாடல் காட்சியிலும் வருகிறேன். பாடல் காட்சியில் சந்தானத்தின் நடன அசைவுகளைப் பார்த்து வியந்து போனேன்” என்கிறார், சித்ரா லட்சுமணன்.
Related Tags :
Next Story