படப்பிடிப்பு முடிவடைந்தது “மஹா’ படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம்” ஹன்சிகா மகிழ்ச்சி
“என் 50-வது படம் என்பதை தாண்டி, ‘மஹா’ படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
ஹன்சிகா மோத்வானியின் 50-வது படமான ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்ததில் அவர் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார். இந்த படத்தில் நடித்தது பற்றி அவர் கூறுகிறார்:-
“என் 50-வது படம் என்பதை தாண்டி, ‘மஹா’ படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மகிழ்ச்சிகரமான அனுபவமாகவும் இருந்தது. இதை சிறப்பான படமாக கருதி, இதயப்பூர்வமாக நேசித்து வேலை செய்த படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
மிக சிறப்பான வகையில் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், உணர்வுகள், ஆச்சரியங்கள் என அனைத்தும் இணைந்த வகையில் அழகான படைப்பை தந்திருக்கும் டைரக்டர் யு.ஆர்.ஜமீலுக்கும் நன்றி. அழகான பாத்திரத்தில் பங்கு கொண்ட எஸ்.டி.ஆருக்கும், திருப்புமுனையான கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீகாந்துக்கும் நன்றி. டீசர், டிரைலர், இசை மற்றும் படத்தை விரைவில் வெளியிட இருக்கிறோம்”.
Related Tags :
Next Story