படக்குழுவினரை ஆச்சரியப்படுத்திய ஷிவானி ராஜசேகர்


படக்குழுவினரை ஆச்சரியப்படுத்திய ஷிவானி ராஜசேகர்
x
தினத்தந்தி 7 May 2021 12:03 PM IST (Updated: 7 May 2021 12:03 PM IST)
t-max-icont-min-icon

ஒளிப்பதிவாளர் கே.வி.குகன், ‘டபிள்யூ டபிள்யூ டபிள்யூ’ என்ற திகில் படத்தை டைரக்டு செய்து இருக்கிறார்.

படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படத்தை பற்றி டைரக்டர் கே.வி.குகன் கூறும்போது...

“இந்த படத்தின் திரைக்கதை ரசிகர்களை பலவிதங்களில் ஆச்சரியப்படுத்தும். கதைப்போக்குடன் சேர்ந்து ரசிகர்களும் விடை தேடும்விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

என் முதல் இயக்கத்தில் வெளிவந்த ‘இனிது இனிது’ படத்தின் நாயகனும், தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ படத்தின் வில்லனுமான ஆதித், கதை நாயகனாக நடித்துள்ளார். கதை நாயகி ஷிவானி பெரும்பாலான காட்சிகளில் ஒரே ‘டேக்’கில் நடித்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினார்” என்றார்.

Next Story