நேரம் தவறாத கே.ஆர்.விஜயா

முன்னாள் கதாநாயகியான கே.ஆர்.விஜயா 400 படங்களை தாண்டி இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகிய இரு பெரும் நடிகர்களுடனும் பல படங்களில் ஜோடியாக நடித்தவர், இவர். குறிப்பாக சிவாஜியுடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்த நாயகிகள் பட்டியலில் இவரும் இருக்கிறார்.
அவர் நடித்து முடித்துள்ள புதிய படமான ‘சண்டக்காரி’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. ‘‘முதுமை பருவத்தை எட்டிவிட்டாலும், அவர் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்தார். ஒருநாள் கூட தாமதமாக வந்ததில்லை. காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 5 நிமிடம் முன்கூட்டியே வந்துவிடுவார்.
அதேபோல் ஒப்பந்தப்படி, மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு விடுவார்’’ என்று ‘சண்டக்காரி’ படத்தின் டைரக்டர் மாதேஷ் கூறினார்.
Related Tags :
Next Story