சுருதிஹாசனுக்கு பிடித்த உணவுகள்


சுருதிஹாசனுக்கு பிடித்த உணவுகள்
x
தினத்தந்தி 19 July 2021 5:18 AM GMT (Updated: 2021-07-19T10:48:04+05:30)

விஜய் சேதுபதி ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ள லாபம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது பிரபாஸ் ஜோடியாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் சலார் படத்தில் நடித்து வருகிறார்.

தனக்கு பிடித்த உணவுகள் பற்றி சுருதிஹாசன் கூறும்போது, “எனக்கு ஜப்பானிய உணவுகள் அதிகம் பிடிக்கும். எல்லாவற்றையும் விட முக்கியமாக சாதம், பருப்பு, சாம்பார், தயிர் இவற்றை வாழை இலையில் வைத்து சாப்பிட மிகவும் பிடிக்கும். சூப், கிரில்டு சிக்கன் என்றாலே என் வாயில் தண்ணீர் ஊறிவிடும். பழ வகைகளில் மாம்பழம், சீதாப்பழம் பிடிக்கும். இளநீர் விரும்பி சாப்பிடுவேன். சமையல் அறைக்கு போய் நானே சமைத்து சாப்பிட நன்றாக தெரியும். கேக் நன்றாக செய்வேன். வெண்ணிலா ஐஸ்கிரீம் பிடித்தமான ஒன்று. மொத்தத்தில் சாப்பிடாமல் வாயை கட்டிக்கொண்டு வயிற்றை காயப்போடுவதை விட இஷ்டமானவற்றை நன்றாக சாப்பிட்டு பிறகு உடற்பயிற்சிகள் செய்வது நல்லது’’ என்றார்.

Next Story