எந்த கதாநாயகியுடன் ஜோடி சேர ஆசை? சிவகார்த்திகேயன் பேட்டி


எந்த கதாநாயகியுடன் ஜோடி சேர ஆசை? சிவகார்த்திகேயன் பேட்டி
x
தினத்தந்தி 10 Oct 2021 6:26 AM IST (Updated: 10 Oct 2021 6:26 AM IST)
t-max-icont-min-icon

எந்த கதாநாயகியுடன் ஜோடி சேர ஆசை? சிவகார்த்திகேயன் பேட்டி.

சிவகார்த்திகேயன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- டாக்டர் படத்தை அடுத்து உங்கள் நடிப்பில் தயாராகும் படங்கள் எவை?

பதில்:- டான், அயலான் ஆகிய படங்கள் தயாராகும்.

கேள்வி:- நீங்கள் சொந்த படங்கள் தயாரித்ததில் நிறைய கடன்கள் வாங்கியிருப்பதாக பேசப்படுகிறதே... அது உண்மையா?

பதில்:- அது வெறும் வதந்திதான். அந்த தகவலில் உண்மை இல்லை.

கேள்வி:- சினிமா பற்றிய உங்கள் கனவு நிறைவேறி விட்டதா?

பதில்:- நான் இப்போதுதான் வந்து இருக்கிறேன். இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

கேள்வி:- எந்த டைரக்டரின் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

பதில்:- ஷங்கர் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

கேள்வி:- எந்த கதாநாயகியுடன் ஜோடி சேர ஆசை?

பதில்:- அப்படி யாரும் இல்லை. கதைக்கு பொருந்துகிற எல்லா கதாநாயகிகளுடனும் நடித்து வருகிறேன். இதையே வருங்காலத்திலும் தொடர்வேன்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.

Next Story