குழந்தை பிறந்த பின்... தினசரி 15 மணிநேரம் படப்பிடிப்பில் செலவிடும் காஜல் அகர்வால்: சிறப்பு பேட்டி


குழந்தை பிறந்த பின்... தினசரி 15 மணிநேரம் படப்பிடிப்பில் செலவிடும் காஜல் அகர்வால்:  சிறப்பு பேட்டி
x

குழந்தை பிறந்த பின், கோஸ்டி படத்தில் நடித்தது உள்பட பல்வேறு விசயங்களை நடிகை காஜல் அகர்வால் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.


சென்னை,


உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான கியூன்! ஹோ கயா நா என்ற படத்தில் சிறு வேடத்தில் தோன்றிய நடிகை காஜல் அகர்வால்.

2007-ம் ஆண்டு கதாநாயகியாக லட்சுமி கல்யாணம் என்ற காதல், அதிரடி கலந்த தெலுங்கு படத்தில் முதன்முறையாக அறிமுகம் ஆனார். அதன்பின்னர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 15 ஆண்டுகளில் 50 படங்களில் நடித்து விட்டார்.

இதற்கு இடையே அவருக்கு திருமணமும் நடந்தது. இதனால், படங்களில் நடிப்பதில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தியது. எனினும், குழந்தை பிறந்த பின்பு, மீண்டும் படங்களில் நடிக்க வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.





சமீபத்தில் வெளியான தனது கோஸ்டி திரைப்படம், குழந்தை பிறந்த பின்பு நடிக்க வந்தது உள்பட பல விசயங்களை அவர் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். முதன்முறையாக இந்த படம், முழுவதும் காஜல் அகர்வாலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்திலும் அவர் நடித்து வருகிறார். குதிரை சவாரி, வில் வித்தை, சிலம்பம் போன்ற கலைகளில் கூட பயிற்சி எடுத்து கொண்டேன். தினசரி 15 மணிநேரம் படப்பிடிப்பில் செலவிடுகிறேன் என்று காஜல் கூறுகிறார்.

அவர் அளித்த பேட்டியில், ஒவ்வொரு படத்திலும் என்னுடைய நடிப்பு திறனை நான் கண்டறிகிறேன். இந்த தருணத்தில், எனது நடிப்பு தொழிலில், என்னுடைய ஒவ்வொரு படமும் வேறுபட்டு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.




இயக்குனர்கள் எனக்காக ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்கு 15 ஆண்டுகள் ஆனாலும், உண்மையில் இது சரியான நேரம் என நான் நினைக்கிறேன். எல்லா விசயங்களும் ஒரு காரணத்துடனேயே நடக்கின்றன.

இதுவரை நடித்த படங்களுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது பணியை தொடருவேன். பெரிய மசாலா படங்களில் நடித்ததில் மகிழ்ச்சியே. ஆனால் தற்போது, பரிசோதனை முயற்சியில் இறங்க ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. கோஸ்டி அதுபோன்ற படம் என கூறியுள்ளார் காஜல்.

இந்த படத்தில் 36 பழம்பெரும் காமெடி நடிகர்களுடன் மறைந்த மயில்சாமி, கே.எஸ். ரவிகுமார், ஊர்வசி, மதன்பாப், சத்யன் மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்து உள்ளனர். இன்றைய சமூகத்தில் காமெடி படங்களே முக்கியம் என உறுதிப்பட கூறும் காஜல், அதற்கான விளக்கமும் அளித்து உள்ளார்.

ஒவ்வொருவருக்கும் மனஅழுத்தம் உள்ளது. அதனால், அதில் இருந்து விடபடவும், பொழுது போகவும் வேண்டும். ரசிகர்களை அழ செய்வது என்பது எளிது. ஆனால், சிரிக்க வைப்பது கடினம் என நான் உணர்கிறேன்.

கோஸ்டி படம் பார்க்கும்போது, கவலைகளை மறந்து மனம் விட்டு ரசிகர்கள் சிரிப்பார்கள் என நான் நம்புகிறேன். கல்யாண் சார் இதுவரை எடுத்த பிற படங்களை விட கோஸ்டி படம் நகைச்சுவை மிகுந்து இருக்கும் என்று காஜல் கூறுகிறார.

குழந்தை பிறந்த பின் நடிக்க வந்த முதல் படம் கோஸ்டி என்ற வகையில் அதுபற்றி அவர் கூறும்போது, நினைத்து பாராத வகையில், சற்ற கடினமுடனேயே அது இருந்தது. பிரசவத்திற்கு பின் 14 கிலோ எடை கூடி விட்டேன். பழைய வடிவத்திற்கு வருவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல என அவர் கூறுகிறார்.

எனக்கு முறையான கல்வி கிடைத்ததில்லை. அதனால், பல ஆண்டுகளாக இந்த துறையில் இருந்த வகையில், சில விசயங்களை நான் கற்று கொண்டேன். கோஸ்டி போன்ற படங்களில் நடித்து, வேறுபட்ட விசயங்களை வெளிப்படுத்தி, பல்வேறு வகைப்பட்ட ரசிகர்களிடமும் எனது பன்முக திறமையை நிரூபிக்க என்னால் முடியும்.

கியூன்! ஹோ கயா நா படத்தில் நடிக்கும்போது கூட, இந்த அளவுக்கு நான் வளருவேன் என்று நினைத்தது இல்லை. அதனால், தற்போது முன்னேறி செல்கிறேன். எனது சிறந்த நடிப்பை வெளிகொண்டு வருவதிலேயே எனது கவனம் உள்ளது என காஜல் அகர்வால் கூறியுள்ளார்.


Next Story