நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் தனது பயணம் : நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம்


நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் தனது பயணம் : நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம்
x
தினத்தந்தி 3 Jun 2019 3:46 PM IST (Updated: 3 Jun 2019 3:46 PM IST)
t-max-icont-min-icon

நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் தனது பயணம் என நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக பேசினார்.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன்  தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படமான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' பட இசை வெளியீட்டு விழா இன்று ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது கூறியதாவது:-

மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது. எனினும், வர்த்தக ரீதியாக தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டி உள்ளது. நட்பு, துரோகம், சாதனை கலந்தது தான் எனது பயணம். தோல்வியிலும் உடன் இருக்கின்ற ரசிகர்கள் தான் என்னுடைய பலம். இனி எனது படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும்.  தமது தயாரிப்பில் அருவி பட இயக்குநர் அருண்பிரபு இயக்கத்தில் மூன்றாவது படம் ஒன்றை தயாரிக்க உள்ளேன் என கூறினார்.

Next Story