'தல'என்று அழைக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு நடிகர் அஜித் திடீர் வேண்டுகோள்


தலஎன்று அழைக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு நடிகர் அஜித் திடீர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Dec 2021 9:35 AM GMT (Updated: 1 Dec 2021 9:49 AM GMT)

'தல' என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று நடிகர் அஜித் அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

சென்னை 

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் .இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து இன்று அறிக்கை வெளியானது.
 
 இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது ;

இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்றும் ,தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் .

'தல' என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று  நடிகர் அஜித் அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உவகை ,வெற்றி, மனஅமைதி, மன நிறைவு  , உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Next Story