நடிகை ராதிகாவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!


நடிகை ராதிகாவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!
x
தினத்தந்தி 7 Dec 2021 11:43 AM IST (Updated: 7 Dec 2021 11:43 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ராதிகா கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் மரத்தின் படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

சென்னை,

நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார், தனது டுவிட்டர் பக்கத்தினை யாரோ ஹேக் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார் 

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “என்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதில் வெளியாகும் கருத்துக்கள் மற்றும் பதிவுகள் குறித்து கவனமாக இருக்கவும்.

சரி செய்ய முயற்சி செய்துவருகிறேன். விரைவில் சரி செய்யப்படும். நன்றி” என தெரிவித்துள்ளார்.










நடிகை ராதிகா கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வீட்டில் வைத்த கிறிஸ்துமஸ் மரத்தின் படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். அதன்பின் அவர் டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டது.

ராதிகா கடைசியாக தீபக் சுந்தர்ராஜனின் அன்னபெல் சேதுபதி படத்தில் நடித்தார். தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, குருதி ஆட்டம், யானை உள்பட பல படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story