பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா பாதிப்பு


பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2022 12:32 PM GMT (Updated: 11 Jan 2022 12:32 PM GMT)

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கொரோனா 3-வது அலை திரையலகினரை கடுமையாக தாக்கி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில்,  முன்னணி நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருப்பதாவது-

லேசான அறிகுறிகளுடன் எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த கவனமாக இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். இருப்பினும், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

வைரஸ் பரவலின் வேகம் நம்மை அச்சுறுத்துகிறது. தயவு செய்து கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வந்து, படப்பிடிப்புக்கு செல்வேன்று என்று நான் நம்புகிறேன்” என்றார்.


Next Story