பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த டிரீட்..! 'பத்து தல' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு..!
நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு 'பத்து தல' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் சிம்பு தற்போது 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இன்று (பிப்ரவரி 3) நடிகர் சிம்புவின் பிறந்தநாள். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'பத்து தல' திரைப்படக்குழு சிறப்பு போஸ்டர் மற்றும் பத்து தல திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஏஜிஆர் (AGR) என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள அப்டேட்டுகள் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 'சில்லுனு ஒரு காதல்' இயக்குனர் ஒபலி என். கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
@StudioGreen2, @PenMovies & Team #PathuThala Wishes our #Atman#STR a Fantastic Birthday❤️
— Studio Green (@StudioGreen2) February 2, 2022
Welcome to the King of Underworld #AJR’s Fort🔥#PathuThalaGlimpsehttps://t.co/0a0JsMK2UA@Kegvraja@jayantilalgada@SilambarasanTR_@Gautham_Karthik@nameis_krishna@arrahmanpic.twitter.com/JGQDWdDk51
Related Tags :
Next Story