தளபதி 66-ல் இணைந்த நடிகர் சரத்குமார்: படக்குழு அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 May 2022 1:53 PM GMT (Updated: 8 May 2022 2:12 PM GMT)

விஜய் நடிக்கும் 66வது படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஐதராபாத்,

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. 

இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு  ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான சமீபத்தில் ஐதராபாத் சென்ற விஜய் பிசியாக நடித்து வருகிறார். 

இந்தநிலையில் இப்படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் முன்னரே வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இணைந்துள்ளதாகவும் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story