புதுச்சேரி: 16 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
16 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
புதுச்சேரி,
ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிரவண மாத சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில் ரூபாய் நோட்டுகளால் மாலை செய்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி 500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய் ஆகியவற்றைக் கொண்டு 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளால் அம்மனுக்கு மாலையும், அலங்காரமும் செய்யப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள், சிறப்பான அலங்காரத்துடன் காட்சியளித்த அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story