ஜூன் மாதத்தில் வாகனங்கள் விற்பனை
கார், பைக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் ஜூன் மாத விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் விற்பனை நிலவரம் வருமாறு:
டாட்டா மோட்டார்ஸ்
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், உள்நாட்டில் மொத்தம் 49,073 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அது 56,773-ஆக இருந்தது. ஆக, விற்பனை 14 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 27 சதவீதம் குறைந்து (18,213-ல் இருந்து) 13,351-ஆக சரிந்து இருக்கிறது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 7 சதவீதம் குறைந்து 35,722-ஆக உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 38,560-ஆக இருந்தது. ஏற்றுமதி 48 சதவீதம் சரிவடைந்து 2,702-வாகனங்களாக உள்ளது.
ஹூண்டாய் மோட்டார்
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மொத்தம் 58,807 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் அது 60,722 கார்களாக இருந்தது. ஆக, விற்பனை 3.2 சதவீதம் குறைந்து இருக்கிறது. உள்நாட்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 7.3 சதவீதம் குறைந்து 42,007 ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 45,314-ஆக இருந்தது. எனினும் ஏற்றுமதி 9 சதவீதம் வளர்ச்சி கண்டு 16,800 கார்களாக இருக்கிறது. சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் அது 15,408-ஆக இருந்தது.
பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 4.04 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 4.03 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. உள்நாட்டில் இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 2 சதவீதம் குறைந்து 2.29 லட்சமாக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2.34 லட்சமாக இருந்தது.
இந்நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 4 சதவீதம் அதிகரித்து 3.51 லட்சமாக உயர்ந்துள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 20 சதவீதம் குறைந்து 53,333-ஆக இருக்கிறது.
ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இந்நிறுவனம் 12.47 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் உயர்வாகும். இதே காலத்தில் அதன் ஏற்றுமதி 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
டி.வி.எஸ். மோட்டார்
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 11 சதவீதம் சரிவடைந்து (3.13 லட்சத்தில் இருந்து) 2.79 லட்சமாக குறைந்து இருக்கிறது. இதில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 6 சதவீதம் குறைந்து 2.83 லட்சமாக இருக்கிறது. சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் அது 3.01 லட்சம் வாகனங்களாக இருந்தது.
உள்நாட்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 8 சதவீதம் குறைந்து 2.26 லட்சம் வாகனங்களாக உள்ளது. இதில் ஸ்கூட்டர் விற்பனை 3.65 சதவீதம் குறைந்து 99,007-ஆக உள்ளது. மோட்டார்சைக்கிள் விற்பனை 2 சதவீதம் உயர்ந்து 1.31 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 10 சதவீதம் உயர்ந்து (12,413-ல் இருந்து) 13,641-ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் ஏற்றுமதி 6 சதவீதம் அதிகரித்து (65,971-ல் இருந்து) 69,900-ஆக உயர்ந்துள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி 4 சதவீதம் உயர்ந்து 57,182-ஆக இருக்கிறது.
Related Tags :
Next Story