2023 -ஆம் ஆண்டுக்குள் தனியார் மூலம் 5 ஜி வசதி துவங்கப்படும்: நிர்மலா சீதாராமன்


2023 -ஆம் ஆண்டுக்குள் தனியார் மூலம் 5 ஜி வசதி துவங்கப்படும்: நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 1 Feb 2022 12:01 PM IST (Updated: 1 Feb 2022 1:45 PM IST)
t-max-icont-min-icon

2025-க்குள் அனைத்து கிராமங்களிலும் ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுடெல்லி,
  • தொலைதொடர்புத்துறையை மேம்படுத்த 5ஜி அலைகற்றை ஏலம் 2022-ல் மேற்கொள்ளப்படும்
  • 2023 ஆம் ஆண்டுக்குள் தனியார் மூலம் 5 ஜி வசதி துவங்கப்படும்.
  • 2025-க்குள் அனைத்து கிராமங்களிலும் ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும்
  • அனைத்து கிராமங்களிலும் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் இணைய வசதி ஏற்படுத்தப்படும்
  • புதிய சட்டத் திருத்தங்கள் உடன் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மாற்றியமைக்கப்படும் 
  • திவாலான நிறுவனங்களை மூட கால அவகாசம் 2 வருடங்களில் இருந்து 6 மாதமாக குறைக்கப்படும்
  •  நகர்ப்புறங்களில் பொது போக்குவரத்து பயன்பாடு ஊக்குவிக்கப்படும். 
  • மெட்ரோ திட்டங்கள் மூலம் நகர்ப்புற போக்குவரத்து மேம்படுத்தப்படும். 
  • மலைவாழ் மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்க 'பர்வத்மாலா' திட்டம்ராணுவ தளவாடங்கள் தேவையில் 68% உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும்.
  • மின்சார வாகனங்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.
  • அரசின் மூலதன செலவுகள் 2022-23ல் ரூ.7.50 லட்சம் கோடியாக அதிகரிப்பு
  • நிலக்கரியில் இருந்து எரிவாயு மற்றும் ரசாயனம் உற்பத்தி செய்ய 4 புதிய தொழிற்சாலைகள்

Next Story