நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்


நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் திருநாள்  வாழ்த்துக்களை தெரிவித்தார்
x
தினத்தந்தி 8 Jan 2020 3:51 PM IST (Updated: 8 Jan 2020 3:51 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும்  அவரி 168-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் ரஜினி, குஷ்பு, மீனா, சதீஷ், சூரி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். நேற்றுடன்   படப்பிடிப்பு முடிவடைந்து நடிகர் ரஜினிகாந்த், விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் பத்திரிகையாளர்கள்  இருந்த இடத்துக்கு நேராக வந்தார். "அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துவிட்டு உடனடியாக காரில் ஏறி சென்றுவிட்டார். 

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம், நாளை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story