ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்சுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்,
சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு, தற்போது வரை உலகம் முழுவதும் 4 ,627 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 129 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் டாம் ஹாங்க்ஸ் பதிவிட்டுள்ளார். டாம் ஹாங்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், ``ஹலோ நண்பர்களே... ரீட்டாவும் நானும் ஆஸ்திரேலியா வந்தோம். நாங்கள் சோர்வாக உணர்கிறோம். ஜலதோஷமும் உடல் வலியும் இருக்கிறது. கொஞ்சம் காய்ச்சலும் இருக்கிறது.
இதனால் இருவரும் கொரோனா வைரஸுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டோம். இதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவோம். மீண்டும் பரிசோதனைகள் செய்யப்படும். பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்காகத் தனிமைப்படுத்தப்படுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story