அதிக சம்பளம் பெற்ற 100 நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய பிரபலம்


அதிக சம்பளம் பெற்ற 100 நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய பிரபலம்
x
தினத்தந்தி 5 Jun 2020 2:10 PM IST (Updated: 5 Jun 2020 2:10 PM IST)
t-max-icont-min-icon

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2020ம் ஆண்டு அதிக சம்பளம் பெற்ற 100 நட்சத்திரங்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து இந்தி நடிகர் அக்சய் குமாரின் பெயர் மட்டுமே உள்ளது.

மும்பை


உலகின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது, இந்த முறை 100 பேரில் ஒரு  இந்திய பிரபலமே அதில் இடம் பிடித்து உள்ளார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அக்‌ஷய் குமார் ஜூன் 2019 முதல் மே 2020 வரை 48.5 மில்லியன் டாலர்  (ரூ.362 கோடி) வருமானத்துடன் 52 வது இடத்தில் உள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டுக்கான போர்ப்ஸ் பட்டியலிலும் அக்சய் குமாரின் பெயர் மட்டுமே இருந்தது. அதில் அக்சய் குமார் 33ஆவது இடத்தில் இருந்தார். அப்போது அவர் சுமார் 490 கோடிரூபாய் ($65 million) ஊதியம் ஈட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Next Story