கொரோனா பாதித்த நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா மருத்துவமனையில் அனுமதி
கொரோனா பாதித்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
புனே,
இந்தி திரையுலகில் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 11ந்தேதி உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில், அமிதாப் பச்சனின் மருமகள் மற்றும் அபிஷேக் பச்சனின் மனைவியான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 12ந்தேதி உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. எனினும் ஜெயா பச்சனுக்கு பாதிப்பு இல்லை என மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உறுதிப்படுத்தினார்.
இதனையடுத்து, நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா பச்சன் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் நானாவதி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story