ஒரு பெரிய நடிகர் என்னை...! தனக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து- பிரபல நடிகை
நவோமி ஹாரிஸ் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து கூறி உள்ளா
வாஷிங்டன்
கடந்த மூன்று ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மணிபென்னியாக நடித்தவர் நவோமி ஹாரிஸ், 2017 ஆம் ஆண்டு மூன்லைட் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதைப் பெற்று உள்ளார்.
நவோமி ஹாரிஸ் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து கூறி உள்ளார். ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பெண்கள் தாக்கப்படுகிறார்கள். இது என்னை மிகவும் கோபப்படுத்துகிறது.
ஒரு ஆடிசனின் போது என ஆடையை பெரிய நடிகர் ஒருவர் மெல்ல மேலே தூக்கினார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏன் என்றால் அங்கு காஸ்டிங் டைரக்டரும், டைரக்டரும் இருந்தனர். நிச்சயமாக யாரும் எதுவும் சொல்லவில்லை, ஏனென்றால் அவர் அவ்வளவு பெரிய நட்சத்திரம். அதுதான் என்னுடைய ஒரே மீடூ சம்பவம்.
எங்களைக் கொலை செய்வதையும் கற்பழிப்பதையும் நிறுத்த வேண்டும். அவ்வளவுதான். இது எளிமை. மேலும் சொல்வது மோசமானது, ஆனால் அத ஆண்கள்தான் செய்ய வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story