சமந்தா அணிந்து வந்த ஆபாச வாசகத்துடன் டீசர்ட் ...! அதிர்ந்த ரசிகர்கள்


சமந்தா அணிந்து வந்த ஆபாச வாசகத்துடன் டீசர்ட் ...!  அதிர்ந்த ரசிகர்கள்
x
தினத்தந்தி 2 Feb 2022 5:34 PM IST (Updated: 2 Feb 2022 5:34 PM IST)
t-max-icont-min-icon

நடிகை சமந்தா அணிந்திருக்கும் டீ-ஷர்ட்டில் ஆபாசமான ஆங்கில வார்தைகள் இடம்பெற்றுள்ளது அது அவரது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

மும்பை

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.

திடீரென சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக ஒரே நேரத்தில் தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இந்த செய்தி இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடித்தார், வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்தார் என்றெல்லாம் இவர்கள் பிரிவுக்கு காரணமாக சொல்லப்பட்டன. பிரிவுக்குப் பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இணையத்தில் அதிகம் பேசப்படும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவராக உள்ளார். மேலும் சமூக ஊடகங்களில் அவரது ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து டிரெண்டாகி வருகின்றன. 

இந்நிலையில் மும்பை சலூன் ஒன்றில் இருக்கும் சமந்தாவின் புகைப்படம், இணையத்தில் வைரலாகியுள்ளது.சமந்தா சமீபத்தில்  வெள்ளை டி-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட் அணிந்து சலூனில் இருந்து ஸ்டைலாக வெளியேறினார். அவர் அணிந்திருக்கும் டீ-ஷர்ட்டில் ஆபாசமான ஆங்கில வார்தைகள் இடம்பெற்றுள்ளது அது அவரது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.



Next Story