இஸ்லாமில் ஹிஜாப் அணிவது விருப்பம் கிடையாது, ஆனால்... ’தங்கல்’ பட நடிகை சைரா வாசிம் கருத்து


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Feb 2022 5:09 PM IST (Updated: 20 Feb 2022 5:09 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து பாலிவுட் நடிகை சைரா வாசிம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை,

கர்நாடகாவில் மாணவர்கள் ஹிஜாப் அணிய மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து "தங்கல்" படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகையான சைரா வாசிம் கண்டணம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறும்போது, 

 "ஹிஜாப் அணிவது அவர்களின் விருப்பம்  என்ற மரபுவழி கருத்து தவறான தகவல். இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது கடமை ஆகும்.

 தாங்கள் நேசிக்கும் கடவுளுக்காக பணிவுடன் ஹிஜாப் அணிகிறோம். குறிப்பிட்ட கொள்கையை பரப்புவதாக பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பது மோசமான நிகழ்வாகும்". இவ்வாறு சைரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


Next Story