நடிகர் அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பு'வல்லமை' ?


நடிகர் அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்புவல்லமை ?
x
தினத்தந்தி 9 March 2022 6:28 PM IST (Updated: 9 March 2022 6:28 PM IST)
t-max-icont-min-icon

மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார்

சென்னை,

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வரவேற்பை பெற்றது. மீண்டும் இவர்கள் கூட்டணியில் 'வலிமை' படம் திரைக்கு வந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது 

இந்த நிலையில் அடுத்து மூன்றாவது முறையாக  வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இது அவருக்கு 61-வது படம். படத்தின் பூஜை இன்னும் சில நாட்களில் நடக்க உள்ளது .மேலும் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது 

இந்த படம் அதிரடி திகில் கதையம்சத்தில் தயாராவதாகவும், அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்றும் ஏற்கனவே தகவல்கள் பரவின. படத்தில் அவருக்கு நெகட்டிவ் வேடம் என்றும் கூறப்பட்டது. மேலும் படத்தில் வில்லன் மற்றும் ஹீரோ என்ற இரண்டு கெட்டப்பிலும் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு 'வல்லமை' என்ற தலைப்பை படக்குழுவினர் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story