"3 மணி நேரம் போனதே தெரியவில்லை...!" ரசிகர்கள் கொண்டாடும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர்
, ரசிகர்களுக்காக தியேட்டர்களின் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ஆர்.ஆர்.ஆர் படம் எதிர்பார்த்ததை விட நன்றாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
சென்னை
பாகுபலிக்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் நடிப்பில் ஆராரார்படம் உருவாகியுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரகனி, ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.தமிழில் இரத்தம் ரணம் ரெளத்திரம் என பெயர் வைக்கபட்டு உள்ளது.
பாகுபலி இரண்டாம் பாகத்தை விட ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை படைக்க வேண்டும் என மிகப்பெரிய புரமோஷன் ஏற்பாடுகளை இயக்குநர் ராஜமெளலி செய்துள்ளார்.
250 கோடி பட்ஜெட்டில் உருவான பாகுபலி 2ம் பாகம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டிய நிலையில், 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரூ.3000 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.
ஆர்ஆர்ஆர் படத்திற்கு புக் மை ஷோவில் மட்டும் 25 லட்சம் பேர் படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்திய சினிமாவிலேயே இதுதான் அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஒரு பிவிஆர் தியேட்டரில் பாகுபலி 3டி பிளாட்டினம் சுப்பீரியர் சீட் ஒன்றின் டிக்கெட் விலை ரூ. 2,100 என்றும் 3டி பிளாட்டினம் டிக்கெட் விலை ரூ. 1,900 என்றும் போடப்பட்டிருக்கும் ஸ்க்ரீன் ஷாட்டை நெட்டிசன்கள் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் ஆர்ஆர்ஆர் படத்தின் டிக்கெட் விலை விண்ணை முட்டுகிறது.
சுதர்ஷன் 35 எம்எம் திரையரங்கில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு சரிசமமாக கட் அவுட்கள் வைக்கப்பட்டு முழுவதும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வேற லெவல் RRR FDFS கொண்டாட்டத்தை டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.
ஒவ்வொரு தியேட்டரில் ராம்சரணுக்கு மிகப்பெரிய கட் அவுட்களை வைத்து வேற லெவல் சம்பவத்தை ரசிகர்கள் செய்து வருகின்றனர். ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணின் நடிப்பும் ஏகப்பட்ட ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களின் ஆதிக்க சக்திக்கு துணை போகும் நபராக இருக்கும் ஒருவர் இந்திய மக்களுக்காக மாறி மிரட்டுவதே இந்த படத்தின் கதை என்கின்றனர்.
நாட்டுக்கூத்து பாட்டுக்கு ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டிஆர் உடன் இணைந்து ஒட்டுமொத்த தியேட்டரும் வேற லெவல் வெறி ஆட்டத்தை போட்டு வருகிறது என ஏகப்பட்ட வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.
3 மணி நேரம் 6 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் 3 மணி நேரம் போனதே தெரியவில்லை என்றும் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு எலிவேஷன் காட்சி வைக்கப்பட்டு தெறிக்கவிட்டுள்ளார் ராஜமெளலி என கொண்டாடி வருகின்றனர்.
தெலுங்கில் திரையுலகில் வெளியான படங்களிலேயே இந்த படம் சிறந்த படம் என சொல்லலாம். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ராம் மற்றும் பீமாகவே வாழ்ந்துள்ளனர். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என ரசிகர் ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆர்ஆர்ஆர் படம் ஒரு விருது பெறும் மெட்டீரியல் என்றும் ஜூனியர் என்டிஆர் சிங்கம் மாதிரி நடித்துள்ளார். இந்த படத்தில் நீங்கள் தண்ணீர். ஆம், நடிப்பின் கடல் என ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் ஆர்ஆர்ஆர் படத்தில் கொமரம் பீம் கதாபாத்திரத்தை பார்த்து மெய்சிலிர்த்துப் போய் கொண்டாடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியான தியேட்டர்களின் அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்தனர். வேலூர் மாவட்டம் குடியத்தத்தில் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. படத்தை பார்க்க உள்ளூர் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும், ரசிகர்களுக்காக தியேட்டர்களின் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ஆர்.ஆர்.ஆர் படம் எதிர்பார்த்ததை விட நன்றாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story