உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்; ஆர்.ஆர்.ஆர். படம் சாதனை
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது.
புதுடெல்லி,
ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 25ந்தேதி வெளியிடப்பட்டது.
உலகம் முழுவதும் இத்திரைப்படம் கடந்த 3 நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது. இதுபற்றி திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் புதிய சாதனையை படைத்து இருக்கிறது. ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது. (தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது)...
இந்திய திரைப்பட புகழை எஸ்.எஸ். ராஜமவுலி மீண்டும் கொண்டு வந்துள்ளார் என தெரிவித்து உள்ளார். அதனுடன், குறிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அதில், விடுமுறை அல்லாத நாளில் மற்றும் கொரோனா காலத்தில் திரைப்படம் வெளியாகி உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இதுதவிர, கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெளியிடப்பட்டு, இந்திய அளவில் ஞாயிற்று கிழமை அதிக வசூல் ஈட்டிய டாப் 5 இந்தி திரைப்பட பட்டியலையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
அதில், ரூ.31.50 கோடி வசூலுடன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் சூர்யவன்ஷி (ரூ.26.94 கோடி), 3வது இடத்தில் 83 (ரூ.17.41 கோடி), 4வது இடத்தில் கங்குபாய் கத்தியவாடி (ரூ.15.30 கோடி) மற்றும் 5வது இடத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் (ரூ.15.10 கோடி) ஆகியவை உள்ளன.
Related Tags :
Next Story