நானும் விஜய் ரசிகர் தான் : பீஸ்ட் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஷாருக்கான்..!


நானும் விஜய் ரசிகர் தான் : பீஸ்ட் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஷாருக்கான்..!
x
தினத்தந்தி 6 April 2022 8:05 AM IST (Updated: 6 April 2022 1:17 PM IST)
t-max-icont-min-icon

பீஸ்ட் படத்திற்கு ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  நடித்துள்ளார் .இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி  வெளியாகவுள்ளது .

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட அந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் 'பீஸ்ட் 'படத்திற்கு பாலிவுட் 'பாட்ஷா' என அழைக்கபப்டும்  நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

அட்லியை போல நானும் விஜய் ரசிகர் தான்  .'பீஸ்ட்' படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

Next Story