"உதட்டை கடித்து பாலியல் தொல்லை" நடிகர் மீது இளம் பெண் மீ டூ புகார்


உதட்டை கடித்து பாலியல் தொல்லை  நடிகர் மீது இளம் பெண் மீ டூ புகார்
x
தினத்தந்தி 7 April 2022 6:00 PM IST (Updated: 7 April 2022 6:00 PM IST)
t-max-icont-min-icon

திரிஷ்யம் உள்பட பலபடங்களில் நடித்து உள்ள நடிகர் மீது இளம் பெண் பாலியல் புகார் கூறி உள்ளார்.

திருவனந்தபுரம்

பிரபல மலையாள நடிகர் அனீஷ் மேனன். இவர் தமிழில் தீக்குளிக்கும் பச்சை மரம், நம்ம கிராமம் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 

ஒரு அடார் லவ், டிரைவிங் லைசென்ஸ், லூசிபர், உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். அனிஷ் மேனன் மீது இளம்பெண் மீ டூ புகார் தெரிவித்து உள்ளார். 

இதுகுறித்து அந்த பெண் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

சிறுவயதில் இருந்தே எனக்கு நடிப்பு மீது ஆர்வம் இருந்தது. குறிப்பாக மோனோ ஆக்ட். பெரிய மனிதர்களின் பிள்ளைகளுக்கு அனீஷ் ஜி மேனன் மோனோஆக்ட்  சொல்லிகொடுந்த்து வந்தார். . அவர் பல குழந்தைகளுக்கு மோனோ ஆக்ட் மற்றும் நாடகம் என்று தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுத்து வந்தார்.

அவரிடம்  சேர்த்து என்னையும்  தொழில் ரீதியாக படிக்க வைக்க வேண்டும் என்று எனது பெற்றோர் உணர்ந்தனர். அனீஷை அணுகினார்கள். அந்த ஆண்டு  மோனோஆக்ட் கற்றுக்கொடுக்க தயார் என கூறினார் அனீஷ் மேனன் நடத்திய நடிப்பு பயிற்சி வகுப்புக்கு சென்றேன். 



அன்றிலிருந்து அவர் எனக்கு மோனோ ஆக்ட் கற்றுத் தரத் தொடங்கினார்.  என்னிடமும் நல்ல அன்பு காட்டுவார். அவர் எப்போதும் என் கன்னங்களை தடவுவார் . பின்னர் அவர்  அதிக சுதந்திரத்தை எடுக்க ஆரம்பித்தார். பொசிஷன் திருத்தம், தோரணை அழகு என்று சொல்லி என் அந்தரங்க உறுப்புகளை தொட ஆரம்பித்தார்.

உடலை தொடுவது பயிற்சியின் ஒரு பகுதி என்று எனது பெற்றோரை நம்ப வைத்தார். இதெல்லாம் நடிப்பின் ஒரு பகுதி என்று என் பெற்றோரைக் கூட அவரால் தவறாக வழிநடத்த முடிந்தது 

ஒரு கட்டத்தில் எனக்கு முத்தமிட்டு உதட்டை கடித்து பாலியல் தொல்லை கொடுத்தார். எனக்கு அழுகையும் பயமும் வந்தது. பெற்றோரிடம் நடிப்பு பயிற்சி வேண்டாம் என்று கூறி விட்டேன். என்னைப்போல் பல பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.



வீட்டில் எனக்கு வேண்டிய ஆதரவு கூட கிடைக்காமல் இதை யாரிடம் சொல்வது? எனவே இதை யாருடனும் பகிர்ந்து கொள்ள பல ஆண்டுகள் ஆனது. அவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மற்ர  சிறுமிகளும் இருக்கலாம். என்னைப் போல் ஒருவர் வெளிப்படையாகப் பேசினால் மற்றவர்களுக்கு தைரியம் வந்துவிடும் என்பது என் நம்பிக்கை இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Next Story