மது, ஆணுறை விளம்பரங்களும் ...! நடிகை நிதி அகர்வாலும்


மது, ஆணுறை விளம்பரங்களும் ...! நடிகை நிதி அகர்வாலும்
x
தினத்தந்தி 15 April 2022 11:32 AM IST (Updated: 15 April 2022 11:32 AM IST)
t-max-icont-min-icon

நிதி அகர்வால் விளம்பர வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வரும் சூழலில் இதைப்பார்த்த ரசிகர்கள் பணத்துக்காக இப்படியா செய்யுறது என்று அவருக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சென்னை

நடிகைகள் சினிமாவில் நடிப்பதை  தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்து வருகிறார்கள் அவ்வப்போது இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி சிக்கலில் மாட்டி கொள்கின்றனர்.

 சமீபத்தில் முன்னணி நடிகைகள் ஹன்சிகா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் அதிக பணம் வாங்கிக்கொண்டு வெளிநாட்டு மதுபானங்களை அவர்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ள நிதி அகர்வாலும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் சமூக வலைதள பக்கத்தில் மது பாட்டிலை திறந்து கையில் உள்ள கோப்பையில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்றும் அந்த பிராந்தியை நன்றாக பருகலாம் என்று பேசியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுஇருந்தார். 

நிதி அகர்வால் மது விளம்பரத்தில் நடித்தது சமூக ஆர்வலர்களை ஆத்திரப்படுத்தியது. இளைஞர்களை நிதி அகர்வால் மது அருந்த தூண்டுவதாக வலைத்தளத்தில் பலர் விமர்சித்தும், கண்டமும் தெரிவித்தனர். 

முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு சினிமாவில் உயர்ந்துள்ள நடிகை நிதி அகர்வால் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.  தற்போது ஆணுறையை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை அவர் தனது  இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.  இதைப்பார்த்த ரசிகர்கள் பணத்துக்காக இப்படியா செய்வது என அவரை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை நிதி அகர்வால், தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் 'ஹரிஹர வீர மல்லு' படத்திலும் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

Next Story