மதுபான பாட்டிலை சொருகி...! பாலியல் கொடுமை பிரபல நடிகர் மீது மனைவி புகார்
ஜானி டெப் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தனது விரலை துண்டித்ததாகவும் நடிகை அம்பெர் ஹெர்ட் புகார் கொடுத்து உள்ளார்.
லண்டன்
பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப்.
பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ என்கிற கதபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமானவர். ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய ஜானி டெப்புக்கும் அவரது இரண்டாவது மனைவியான நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கும் சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த 1983ம் ஆண்டு அன்னி அல்லிசன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கை முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. பின்னர், அக்வாமேன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள அம்பெர் ஹெர்ட் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்த ஜானி டெப், 2017ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகையான அம்பெர் ஹெர்ட், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தனது விரலை துண்டித்ததாகவும், இதற்கு நஷ்ட ஈடாக அவர் 350 கோடி ரூபாய் தனக்கு தர வேண்டும் என பல ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறார். தற்போது அந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்து இருக்கிறது
ஜானி டெப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நீதிமன்றத்தில் சிறுநீரால் தனது பெயரை ஜானி டெப் எழுதினார் என்ற கேவலமான குற்றச்சாட்டு ஒன்றையும் நடிகை அம்பெர் வைத்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்லிக் கொண்டே நீதிமன்றத்தை குழப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது, தனது உறுப்பில் மதுபான பாட்டிலை சொருகி பாலியல் ரீதியாக கடுமையான டார்ச்சர் கொடுத்தார் ஜானி டெப் என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ஆம்பர் ஹெர்ட். மேலும், அதன் காரணமாக தனது பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றதாகவும் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார்.
மற்றவர்களை போல நானும் ஜானி டெப் நல்லவர் என நம்பித் தான் திருமணம் செய்தேன். ஆனால், குடி போதையில் அவர் கொடுக்கும் டார்ச்சர்கள் பிடிக்காமல் போனதால் தான் விவாகரத்து முடிவுக்கே வந்துள்ளேன் என ஆம்பர் ஹெர்ட் கூறியுள்ளார். பல வருடங்களாக இந்த வழக்கு நடந்து கொண்டே வருகிறது.
எப்போது தான் தீர்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நடிகர் ஜானி டெப்பை பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் உள்ளிட்ட பல படங்களில் இருந்தும் ஹாலிவுட் வட்டாரம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story