'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் டிரைலர் வெளியானது..!
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது .
சென்னை,
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா என்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது .
#KRKTrailer ➡️https://t.co/1jDXoYKVbn#KaathuvaakulaRenduKaadhal
— VijaySethupathi (@VijaySethuOffl) April 22, 2022
A @VigneshShivN Original
An @anirudhofficial Musical #KRKonApril28
#Nayanthara@Samanthaprabhu2@7screenstudio@Rowdy_Pictures@RedGiantMovies_@SonyMusicSouth@proyuvraajpic.twitter.com/J7swFZOGon
Related Tags :
Next Story