நான் எனது தந்தையின் நிழலில் வாழ விரும்பவில்லை - நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்
எனது பெற்றோர்கள் எனக்காக் நிறைய தியாகம் செய்துள்ளனர். நான் எனது தந்தையின் நிழலில் வாழ விரும்பவில்லை என நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் கூறி உள்ளார்.
புதுடெல்லி
கோபன்ஹேகனில் நடந்த டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 800 மீட்டர் பிரீ ஸ்டைலில் தனது மகன் வேதாந்த் தங்கப் பதக்கம் வென்ற செய்தியை தனது சமூக ஊடக பக்கத்தில் நடிகர் ஆர் மாதவன் வெளியிட்டு தான் ஒரு பெருமைமிக்க தந்தை என்பதை நிரூபித்தார்.
வேதாந்த் தூர்தர்ஷன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது தனது அப்பாவின் நிழலில் வாழ விரும்பவில்லை என்றும், தனக்கென ஒரு பெயரை உருவாக்க விரும்புவதாகவும் கூறினார்.மேலும் அவர் அவர் மாதவனின் மகனாக இருக்க விரும்பவில்லை. தனது பெற்றோர்கள் அவரை எப்போதும் நன்றாக கவனித்து வருவதாகவும், தனக்காக துபாய்க்கு மாறியது தனது பெற்றோர் செய்த முக்கிய தியாகம் என்றும் கூறினார்.
நடிகர் மாதவனும் அவரது குடும்பத்தினரும் வேதாந்திற்கு சிறந்த நீச்சல் பயிற்சி கிடைக்க கடந்த ஆண்டு துபாய்க்கு மாறினர். வேதாந்த் இதற்கு முன்பு மார்ச் 2021 இல் லாட்வியா ஓபனில் வெண்கலப் பதக்கம் வென்றார் மற்றும் கடந்த ஆண்டு ஜூனியர் தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப்பில் ஏழு பதக்கங்களை (நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம்) வென்றுள்ளார்.
Related Tags :
Next Story