தந்தை முன் இப்படி ஒரு ஆடையிலா...! அமீர்கான் மகள் மீது கடும் விமர்சனம்...!


தந்தை முன் இப்படி ஒரு ஆடையிலா...! அமீர்கான் மகள் மீது கடும் விமர்சனம்...!
x
தினத்தந்தி 10 May 2022 3:41 PM IST (Updated: 10 May 2022 3:41 PM IST)
t-max-icont-min-icon

அமீர்கானுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். அண்மையில் அவரது மகள் இரா கான் கடந்த 9 ந்தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

மும்பை

நடிகர் அமீர்கான் பாலிவுட் சினிமாவே பெருமையாக கொண்டாடும் ஒரு சிறந்த நடிகர். நடிப்புக்கு பெயர் போன இவரது நிறைய படங்கள் பெரிய அளவில் சாதனை செய்துள்ளன.

அதிகமாக சீனாவில் ஒளிபரப்பான இந்திய படங்களில் இவரது படங்கள் பெரிய பங்கு வகித்துள்ளது.

தனது இரண்டாவது மனைவியையும விவாகரத்து செய்து இப்போது மகன், மகளுடன் வசித்து வருகிறார்.

அமீர்கானுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். அண்மையில் அவரது மகள் இரா கான் கடந்த 9 ந்தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பெற்றோர் அமீர் கான் மற்றும் ரீனா தத்தா மற்றும் காதலன் நுபுர் ஷிகாரே உட்பட அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன். அமீரின் இரண்டாவது மனைவி, கிரண் ராவ் மற்றும் அவர்களது மகன் ஆசாத் ஆகியோரும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர

இரா கான் தனது இன்ஸ்டாகிராமில்  தனது பிறந்தநாள் விழாவின் புகைப்படங்களின் தொகுப்பைப் பகிர்ந்துள்ளார்.

முதல் இரண்டு படங்களில் இரா கான் பல வண்ண டூ பீஸ் நீச்சல்  உடையில்  தனது பிறந்தநாள் கேக்கை வெட்டுகிறார், அதே நேரத்தில் அவரது பெற்றோர் அவரை உற்சாகப்படுத்துகிறார்கள். அடுத்த படங்களில் இரா கான் தனது காதலர் நூபுர் ஷிகாரேயுடன் சீச்சல் குளத்தில் போஸ் கொடுத்து உள்ளார். புகைப்படத்தில்  கிரண் ராவ் மற்றும் முஸ்க்கான் ஜாபரி உள்ளிட்டவர்கள் உள்ளனர். 

பிறந்தநாள் கேக் வெட்டும் போது அமீர்கானின் மகள் இரா கான் நீச்சல்  உடையில் இருந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அப்பா முன் இப்படி ஒரு உடையில் இருப்பதாக என மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.. 

தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் படங்களை வெளியிட்ட பிறகு, பலர் சமூக வலைதளங்களில் அவரது தந்தை அமீர் முன் அவர்  டூபீஸ் உடையில் அணிந்து இருந்ததை விமர்சித்தனர்.

ஆமிர் கானின் மகள் இரா கானுக்கு ஆதரவாக சோனா மொஹபத்ரா டுவீட் செய்துள்ளார், அந்த 25 வயது இளம் பெண் அவரது விருப்பங்களைச் செயல்படுத்த அவரது தந்தையின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறி உள்ளார்.




Next Story