இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு இன்று பிறந்த நாள்: சச்சின் உள்பட பிரபலங்கள் வாழ்த்து


இந்திய அணியின் முன்னாள் கேப்டன்  கங்குலிக்கு இன்று பிறந்த நாள்: சச்சின் உள்பட பிரபலங்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 8 July 2017 9:29 AM GMT (Updated: 8 July 2017 9:29 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இன்று தனது 45 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

புதுடெல்லி,

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரும் மிகச்சிறந்த துவக்க ஆட்டக்காரரும், ரசிகர்களால் தாதா என்றும் செல்லமாக அழைக்கப்பட்ட கங்குலி இன்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

இதையொட்டி கங்குலிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கிரிக்கெட் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சின் தெண்டுல்கர் கங்குலிக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். யுவராஜ்சிங், விரேந்திர சேவாக், ஓஜா,  உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

இவர்களை தவிர இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி மற்றும் பலர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கங்குலியின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Story