ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 5 April 2019 2:14 PM GMT (Updated: 5 April 2019 2:14 PM GMT)

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

பெங்களூர்,

பெங்களூரில்,  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 17-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில்  டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  இதனையடுத்து  பெங்களூர் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. 

இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 22 போட்டிகளில் மோதியுள்ளன. இதில்  பெங்களூர் அணி  9 வெற்றியையும்,  கொல்கத்தா அணி  13 வெற்றியையும் பெற்று உள்ளன.

இத்தொடரில் பெங்களூர் அணி ஆடியுள்ள 4 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளன. எனவே இப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக பெங்களூர் அணி கடும் முனைப்புடன் விளையாடும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு  இப்போட்டி பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் கொல்கத்தா அணி இத்தொடரில்  3 போட்டிகளில் 2 வெற்றியையும், 1 தோல்வியையும் பெற்றுள்ளன. 

கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர்கள்:-

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், உத்தப்பா, சுப்மான் கில்,  சுனில் நரின்,  நிதீஷ் ராணா, குல்தீப் யாதவ்.

பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர்கள்:-

விராட்கோலி (கேப்டன்), பார்த்தீவ் பட்டேல், டிவில்லியர்ஸ், ஸ்டோனிஸ், டிம் சவுதி,  யுஸ்வேந்திர சாஹல்.


Next Story