மும்பையின் பந்து வீச்சில் சுருண்டது டெல்லி - மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி,
டெல்லியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 34-வது லீக் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக கிருணல் பாண்டியா 37 (26) ரன்கள், டி காக் 35 (27) ரன்கள், ஹர்திக் பாண்டியா 32 (15) ரன்கள், ரோகித் சர்மா 30 (22) ரன்கள் எடுத்தனர்.
டெல்லி அணியில் ரபடா 2 விக்கெட், அக்ஷர் பட்டேல் மற்றும் அமித் மிஸ்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக தவான் 35 (22) ரன்கள், அக்ஷர் பட்டேல் 26 (23) ரன்கள் எடுத்தனர்.
மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய ராகுல் சாஹார் 3 விக்கெட், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட், கிருணல் பாண்டியா, மலிங்கா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
Related Tags :
Next Story