ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2019 #CSKvKXIP
மொகாலி,
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 55-வது லீக் போட்டி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சென்னை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.
வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்தில் உள்ள சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்யும் ஆவல் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஐ.பி.எல். வரலாற்றில் அது சென்னை அணியின் 100-வது வெற்றியாக பதிவாகும்.
5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளி எடுத்துள்ள பஞ்சாப் அணி இந்த முறை பஞ்சராகி விட்டது. ஒரு வேளை கடைசி லீக்கில் இமாலய வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சில முடிவுகள் சாதகமாக அமைந்தால் அதிசயம் நிகழலாம். ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்துள்ள பஞ்சாப் அணியினர் உள்ளூரில் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்யும் நோக்குடன் களம் காணுவார்கள்.
Related Tags :
Next Story