இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட்: போட்டி துவங்குவதில் தாமதம்


இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட்: போட்டி துவங்குவதில் தாமதம்
x
தினத்தந்தி 3 Dec 2021 9:20 AM IST (Updated: 3 Dec 2021 10:46 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் போட்டி ‘டிரா’வில் முடிந்தது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு போட்டி துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 

மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால், போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 9 மணிக்கு சுண்டப்படவேண்டிய டாஸ் தாமதமாகியுள்ளது.

மைதானத்தில் உள்ள ஈரப்பதம் குறித்து நடுவர்கள் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர். ஈரப்பதம் குறைந்திருந்தால் மட்டுமே டாஸ் சுண்டப்பட்டு போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மும்பையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியா-நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 
1 More update

Next Story