கோலி கேப்டன்சி சர்ச்சை.. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஷாகித் அப்ரிடி அறிவுரை..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தான்,
ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் அதிரடியாக நீக்கியது.அவருக்கு மாற்றாக ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்து பிசிசிஐ உத்தரவிட்டது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் முதல் ரோகித் சர்மா இந்திய அணியின் முழு நேர ஒருநாள் மற்றும் 20 வது ஓவர் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது .
ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி தானாக விலக வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் விரும்பியது. இதற்காக அவருக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அவர் விலக மறுத்ததால் நீக்கப்பட்டதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஒருநாள் அணியின் கேப்டன்சியில் தொடர்வதாக விராட் கோலி தெரிவித்த போதும், பிசிசிஐ அதனை ஏற்றுக்கொள்ளாமல் முடிவெடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி ஏற்கனவே விராட் கோலியிடம் பேசப்பட்டது. அவர் எப்போதும் சண்டையிடுவார் என விமர்சனம் செய்தார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :
‘‘விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய விவகாரத்தை தற்போதைய நிலையை விட சிறந்த வகையில் கையாண்டிருக்க வேண்டும். கிரிக்கெட் வாரியத்தின் பணி மிக முக்கியமானது என்று நான் எப்போதுமே நம்புகிறவன்.எந்தவொரு குறிப்பிட்ட வீரர்களுடனும், தேர்வுக்குழு கமிட்டி திறமையான வகையில் கலந்துரையாட வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "கிரிக்கெட் வாரியம் அவர்களுடைய திட்டம் என்ன என்பதையும், அணிக்கு எது சிறந்ததாக இருக்கும் என கேப்டனிடம் வெளிப்படையாக நேருக்கு நேர் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு கேப்டனின் கருத்தை அவர்கள் கேட்டு அறியவேண்டும் இல்லையெனில் இது போன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வராது" எனவும் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story