செஞ்சூரியன் டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்தியா 174 ரன்களுக்கு ஆல் அவுட்


செஞ்சூரியன் டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்தியா 174 ரன்களுக்கு ஆல் அவுட்
x
தினத்தந்தி 29 Dec 2021 12:46 PM GMT (Updated: 29 Dec 2021 12:48 PM GMT)

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற இந்தியா 305 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஜோகன்ஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 105.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை குவித்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 130 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 

ஆனால், தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 62.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் தென் ஆப்பிரிகாவை விட 304 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில் இன்றும், நாளையும் எஞ்சியுள்ளதால் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.   

Next Story