2-வது ஒருநாள் போட்டி : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதல்


2-வது ஒருநாள் போட்டி : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதல்
x
தினத்தந்தி 8 Feb 2022 11:03 AM GMT (Updated: 8 Feb 2022 11:03 AM GMT)

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.

ஆமதாபாத்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2 வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது. நாளைய போட்டியில் வெற்றிபெற்று  இந்திய அணி  தொடரை வெல்லுமா என எதிர்பார்க்கப்படுகிறது .  

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி வெஸ்ட் இண்டீசுக்கு உள்ளது.  இதில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும்.

இந்த போட்டி நாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 

Next Story