ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 19 March 2022 10:34 AM GMT (Updated: 19 March 2022 10:34 AM GMT)

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்பட 24 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன.

கொழும்பு,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்  உள்பட  24 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்த கவுன்சிலின் தலைவராக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில், இன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷாவின் பதவிக்காலம் 2024- ஆம் ஆண்டு வரை நீட்டிக்க ஒருமனதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story