கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? - மிதாலிராஜ் விளக்கம்


image credit:insidesport
x
image credit:insidesport
தினத்தந்தி 27 March 2022 2:32 PM GMT (Updated: 27 March 2022 2:40 PM GMT)

இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ், தனது ஓய்வு முடிவு குறித்து பதிலளித்துள்ளார்..

கிரிஸ்ட்சர்ச்,

இந்திய பெண்கள் அணி உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வியை தழுவி லீக் சுற்றுடன் வெளியேறியது.

இந்த நிலையில், போட்டி முடிந்த பின்னர் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலிராஜ், மெய்நிகர் வீடியோவில் போட்டியளித்தார். அப்போது ஓய்வு முடிவு குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, 

நாங்கள் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவோம் என்று நினைத்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அது நடக்கவில்லை. அரையிறுதிக்கு தகுதிபெற முடியாமல் போனது எங்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை உணரவும், எனது எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவும் நீங்கள் எனக்கு ஒரு மணி நேரம் கூட கொடுக்கவில்லை. எனது ஓய்வு முடிவு குறித்து அறிவிக்க இது சரியான நேரமாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்


Next Story