ஐபிஎல் 2022 : முதல் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்


Image Courtesy : @IPL
x
Image Courtesy : @IPL
தினத்தந்தி 3 April 2022 5:10 AM GMT (Updated: 3 April 2022 5:10 AM GMT)

தோல்வியில் இருந்து மீள பஞ்சாப் அணியும் முதல் வெற்றியை பெற சென்னை அணியும் இன்று களம் காண்கின்றன.

மும்பை,

15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை அணி தங்கள் முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது. அதன் பிறகு லக்னோ அணியுடன் நடந்த 2-வது போட்டியில் முதல் பேட்டிங் செய்த சென்னை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தும் பந்துவீச்சில் கோட்டைவிட்டதால் தோல்வியை தழுவியது.

அதே போல் பஞ்சாப் அணி முதல் போட்டியில் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. ஆனால் 2-வது போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியுற்றது.

இந்த நிலையில் இன்று இரண்டு அணிகளும் மோதுகின்றன. தோல்வியில் இருந்து மீள பஞ்சாப் அணியும் முதல் வெற்றியை பெற சென்னை அணியும் இன்று களம் காண்கின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story