பஞ்சாப் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் வைபவ் அரோராவுக்கு ஷிகர் தவான் புகழாரம்


Image Courtesy : PTI
x
Image Courtesy : PTI
தினத்தந்தி 4 April 2022 11:55 PM IST (Updated: 4 April 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

பவர் பிளேவிலேயே ராபின் உத்தப்பா, மொயின் அலி ஆகியோரது விக்கெட்களை வைபவ் அரோரா வீழ்த்தினார்.

மும்பை,

ஐபிஎல் 15ஆவது சீசனின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜிதேஷ் ஷர்மா, வைபவ் அரோரா ஆகிய இரண்டு புதுமுக வீரர்கள் இடம்பெற்றனர்.

சிஎஸ்கேவுக்கு எதிராக அறிமுக வீரர் வைபவ் அரோரா சிறப்பாக பந்து வீசினார். வைபவ் அபாரமாக பந்துகளை ஸ்விங் செய்து, பிரமிக்க வைத்தார். குறிப்பாக தீபக் சஹாரைப் போல இன் ஸ்விங், அவுட் ஸ்விங் இரண்டையும் வீசி அசத்தினார். இவரது பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். 

பவர் பிளேவிலேயே ராபின் உத்தப்பா, மொயின் அலி ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியில் 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்களோடு தனது 4 ஓவர்கள் நிறைவு செய்தார். 

இந்த நிலையில் இவரை அணிக்குள் கொண்டு வந்தது குறித்து, அந்த அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் பேசியுள்ளார்.

இது குறித்து அவர்  “பயிற்சிக்கு முன்புவரை வைபவ் பந்துவீச்சு குறித்து எங்களுக்கு தெரியாது. அவர் ஒரு சாதரான பந்துவீச்சாளராக  இருப்பார் எனக் கருதினோன். ஆனால், பயிற்சியின்போது அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “உண்மையில், பயிற்சியின்போது எந்த பேட்ஸ்மேனாலும் வைபவுக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியவில்லை. நானும்கூட திணறினேன். இப்படி அவர் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கையை பெற்றதால்தான், விரைவிலேயே லெவன் அணியில் வாய்ப்பு கிடைத்தது. இனி வரும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார்
1 More update

Next Story