வெற்றி பாதைக்கு திரும்பிய ஐதராபாத் அணிக்கு பின்னடைவு - பிரபல தமிழக வீரர் விலகல்


Image Courtesy : Twitter / @SunRisers
x
Image Courtesy : Twitter / @SunRisers
தினத்தந்தி 12 April 2022 10:57 AM GMT (Updated: 12 April 2022 10:57 AM GMT)

காயம் காரணமாக அடுத்த 2 போட்டிகளில் இருந்து ஐதராபாத் அணியின் பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் விலகியுள்ளார்.

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி பின்னர் சென்னை , குஜராத் ஆகிய இரண்டு அணிகளையும் வீழ்த்தி வெற்றிநடை போடுகிறது.

வெற்றிக்கு திரும்பி இருக்கும் அந்த அணிக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் பலம் வாய்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அடுத்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடமாட்டார் என அந்த அணியின்  பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டாம் மூடி பேசுகையில், "சுந்தருக்கு கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதுகுறித்து பிசியோதெரபிஸ்ட் கவனித்து வருகின்றனர். இதனால் அவர் பந்துவீசுவது வீசுவது கடினம். அவர் குணமாக சுமார் ஒரு வாரம் ஆகலாம் " என அவர் தெரிவித்தார்.

இதனால் இந்த வாரம் நடைபெறவுள்ள ஐதராபாத் அணியின் அடுத்த இரண்டு போட்டிகளில் சுந்தர் விலகியுள்ளது உறுதியாகியுள்ளது.

Next Story